விஜய்யை விமர்சித்த பிரகாஷ் ராஜ்.. ஜனநாயகனில் ஏற்பட்ட சிக்கல்

Vijay : விஜய் அரசியலில் நுழைய உள்ள நிலையில் அவரது கடைசி படமாக ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக கூறப்பட்டது.

அதாவது விஜயுடன் இணைந்து கில்லி, வாரிசு போன்ற படங்களில் பிரகாஷ்ராஜ் பணியாற்றி இருக்கிறார். சமூகம் சார்ந்த விஷயங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றில் அடிக்கடி பிரகாஷ்ராஜ் கருத்து கூறுவது உண்டு.

அவ்வாறு அரசியலில் பவன் கல்யாண், விஜய் போன்றோருக்கு போதிய தெளிவு இல்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு விஜய்யை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகிய நிலையில் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை.

விஜய்யை விமர்சித்த பிரகாஷ்ராஜ்

அதனுடைய ஆதங்கத்தில் தான் இவ்வாறு பேசுகிறார் என்ற பலரும் கூறி வந்தனர். ஆனால் ஜனநாயகன் படத்தில் பிரகாஷ்ராஜ் இடம் பெறுகிறார். இனிமேல் தான் விஜய் உடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

விஜய் பற்றி இப்படி பேசிவிட்டு அவரை நேருக்கு நேராக எவ்வாறு படப்பிடிப்பில் சந்திப்பார். இதில் அவருக்கு சங்கடம் இருக்காதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்குமே உண்டு.

விஜய்யைப் பற்றி பேசியது அவருடைய எண்ணம். மேலும் அரசியல் மற்றும் சினிமா இரண்டுமே வேறு. அவ்வாறு பிரகாஷ்ராஜ் சினிமாவில் தனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவார். விஜய்யும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.