ஜனநாயகன் படம் சூட்டிங் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் ஷூட்டிங்கில் விஜய் தனது போஷனை இரண்டு நாட்களில் முடித்துவிட்டு அரசியல் சம்பந்தமான வேலைகளுக்கு வந்துவிட்டார். மீதமுள்ள ஆர்டிஸ்ட்களை வைத்து ஹச் வினோத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்க்கு அரசியல் பற்றிய புரிதல் இன்னும் தெளிவாக இல்லை என பிரகாஷ்ராஜ் ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார். அதைப்போல தான் ஆந்திராவில் பவன் கல்யாணின் அரசியல் பிரவேசத்தையும் கூறி வந்தார். இப்படி அரசியலை கற்றுக்கொண்டு ஞானி போல் பேசி வருகிறார் பிரகாஷ்ராஜ்.
ஜனநாயகன் படத்திலும் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இப்படி காலையில் விஜய்யை பற்றி பேசிவிட்டு மாலையில் அவரை சந்தித்துள்ளார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளனர். ஒருவேளை இருவருக்கும் அரசியல் கருத்துதான் வேறுபடுகிறதோ என்னமோ.
ஜனநாயகன் படத்தில் தற்போது விஜய்யின் கதாபாத்திர பெயர் வெளியில் வந்துள்ளது. விஜய் TVK என்ற தனது கட்சியின் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தான் இந்தப்படத்திலும் குதர்க்கமாக வைத்துள்ளார். அதைத்தான் கைகளில் பச்சையும் குத்திக் கொண்டு வலம் வருகிறார்.
“தளபதி வெற்றி கொண்டான்(TVK) என்ற கதாபாத்திர பெயரில்தான் ஜனநாயகன் படத்திலும் நடிக்கிறாராம். இப்படி சுத்தமான தமிழ் பெயரை வைத்து அசத்தியுள்ளார் இயக்குனர். இதற்குப் பின்னால் விஜய் தனது கட்சியின் பெயரை, இன்னும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த ஏற்பாடாக கூட இருக்கலாம்.