Actor Prasanth: ஒரு காலத்தில் முன்னணி நடிகராக நடித்து அனைத்து படங்களும் வெற்றியை கொடுத்து ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் பிரசாந்த். அதன் பின் இவருடைய போதாத காலம் சினிமா கேரியர் தலைகீழாக மாறிவிட்டது. அத்துடன் கல்யாண வாழ்க்கையும் சொல்லும்படியாக அமையாமல் விவாகரத்து ஆகி தன்னந்தனியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு வருகிறார்.
அப்படிப்பட்ட இவர் நடித்த படங்களின் மூலம் இரண்டு நடிகர்களுக்கு நிகரான வாய்ப்பை கொடுத்து அவர்களை தூக்கிவிட்டு அழகு பார்த்திருக்கிறார். தற்போது பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் அவர்களுக்கு இணையாக யாராவது ஸ்கோர் செய்து விட்டால் உடனே எடிட்டிங் மூலம் அந்த சீன்களை எல்லாம் நீக்கி விடுவார்கள்.
இப்படி இவர்களுக்கு மத்தியில் டாப் ஸ்டார் ஆக இருந்த பொழுது இவர் படங்களின் முக்கியமான கேரக்டரை அந்த நடிகர்களுக்கு கொடுத்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். நம்மளை விட நன்றாக நடித்தார்கள் என்று கொஞ்சம் கூட பொறாமைப்படாமல் அவர்களை வளர்த்து விட்டிருக்கிறார்.
அந்த வகையில் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் இவருடைய நண்பராக நடித்த கரண். இப்படத்திற்கு முன்னதாக வரை கிடைத்த சாதாரண கேரக்டரில் நடித்து வந்திருந்தார். அப்படிப்பட்ட இவரை தனக்கு இணையான முக்கியமான கேரக்டரை கொடுத்து அனைவரது கவனத்திற்கும் கொண்டு போய் சேர்த்து விட்டிருக்கிறார். அதன்பின்னே தான் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி இவர் நடித்த போதும் இவருக்கு ஏற்ற மாதிரி சரியான அங்கீகாரம் கிடைத்தது. அடுத்ததாக தற்போது உச்சம் தொட்ட நடிகராக ஆல்ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித்தின் வளர்ச்சிக்கும் முதல் படி கற்களாக இருந்து தூக்கி விட்டவர் பிரசாந்த் தான். அதாவது கல்லூரி வாசல் படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடித்த பொழுது அவருடைய நண்பராக நடிக்கும் வாய்ப்பை அஜித்திற்கு தூக்கிக் கொடுத்தார்.
அதுவும் சும்மா சாதாரண கேரக்டராக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரமாகவும் நிறைய கைதட்டல்களை வாங்கும் படியான காட்சிகளுக்கும் உதவி செய்திருக்கிறார். அப்படி இவர்கள் இரண்டு பேரும் பிரசாந்த் நடித்த படத்தில் இவரை விட நடிப்பு சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு நடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் எதையும் எடிட் பண்ணி விடாமல் அவருடைய திறமையை அப்படியே வெளிக்காட்டி இருக்கிறார்.