பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி லைக்காவுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் லைக்கா நிறுவனம் இந்த பொன்னியின் செல்வன் மூலம் பல மடங்கு லாபத்தை பார்த்துள்ளது. அதனாலேயே தற்போது இந்த நிறுவனம் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் லைக்கா தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது. அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்து வைத்திருந்த நடிகரை தன்னுடைய தயாரிப்பில் லைக்கா நடிக்க வைக்க விரும்பவில்லை.
ஏனென்றால் அந்த ஹீரோவை வைத்து ஏற்கனவே ஒரு படத்தை தயாரித்திருந்த லைக்கா இன்னும் அந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. போட்ட பட்ஜெட்டில் பாதி கூட பிசினஸ் ஆகாத அந்த திரைப்படத்தால் லைக்கா நிறுவனம் அதிக மன உளைச்சலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அதே ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டாம் என்ற முடிவிலும் அந்த நிறுவனம் இருக்கின்றது.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிடிவாதமாக அந்த நடிகர் தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். இவ்வளவு அமளி துமளிக்கும் காரணமான அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல ஹீரோ அதர்வா தான். ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவருக்கு சமீப காலமாக வெளியான எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை.
அந்த வகையில் இவர் ஒரு ராசியில்லாத ஹீரோவாக பார்க்கப்படுகிறார். ஆனால் ஐஸ்வர்யா தற்போது இயக்க இருக்கும் திரைப்படத்தில் அதர்வா நடித்ததால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். மேலும் அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் 20 நிமிடங்கள் வரும் காட்சிகளில் நடிக்க இருக்கிறார். இதனாலேயே அந்த திரைப்படம் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று தெரிகிறது.
இப்படி படத்தில் ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும் லைக்கா நிறுவனம் அதர்வாவை ஹீரோவாக நடிக்க வைக்க தயங்கி வருகிறது. ஆனாலும் ஐஸ்வர்யா இந்த விஷயத்தில் தன் அப்பாவை காரணம் காட்டி ரொம்பவும் பிரஷர் கொடுத்து வருகிறாராம். தற்போது சூப்பர் ஸ்டாரை இரண்டு படங்களில் புக் செய்து வைத்திருக்கும் லைக்கா இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திணறி வருகிறது.