சூர்யாவை இயக்கும் பிரித்விராஜ்.. கேட்டாலே தல சுத்துதுல்ல, யாரோட பயோபிக் தெரியுமா.?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா தனது 42-வது படத்தில் பிசியாக நடித்த வருகிறார். பத்து மொழிகளில் தயாராகும் இந்த படம் வரலாற்று கதையம்சம் கொண்டதாகும். இந்த படத்திற்கு பிறகு சூர்யா. நடிகர் பிரித்விராஜ் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

அதுவும் யாரோட பயோபிக் என்ன தெரிந்தால் அசந்து போயிடுவீங்க. சமீபத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்று சூர்யா இருவரும் சந்தித்து பேசினர். அதன் பிறகு சூர்யா தயாரிப்பில் பிரித்விராஜ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த படம் பிரபல தொழிலதிபர் ஒருவரின் பயோபிக்காகவும் உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன் ஆன தொழிலதிபர் ராஜன் பிள்ளை என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பிரித்விராஜ் முயற்சி செய்து வருகிறார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவுடன் பிருத்விராஜ் இணைந்து நடித்து படத்தை அவரே இயக்கவும் போகிறாராம். ஏற்கனவே சூர்யா தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளதால், ராஜன் பிள்ளை கேரக்டரிலும் சூர்யா பட்டையை கிளப்ப போகிறார்.

ஏனென்றால் கேரளாவை சேர்ந்த ராஜன் பிள்ளை, ‘பிஸ்கட் கிங்’ என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சி செய்தவரும் இவர் தான். இவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இன்று வரை இவருடைய மரணம் மர்மமாகவே இருக்கும் நிலையில், அவருடைய வாழ்க்கை கதையை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை குறித்த முழு அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.