விஜய் உடன் நடிக்க மறுத்த பிரித்விராஜ்.. சூப்பர் ஹீரோவை தட்டி தூக்கிய லோகேஷ்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கும் உள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதனால் மீண்டும் இவர்கள் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஜயின் படத்தை லோகேஷ் இயக்க உள்ளார். தளபதி 67-கான பிரி ப்ரொடக்ஷன் வேலை தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு பேர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் லோகேஷ் தனது ஹீரோவான மன்சூர் அலிகானை வில்லனாக நடிக்க வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் பிரித்விராஜ் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பல படங்களில் அவர் பிஸியாக உள்ளதால் கால்ஷூட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரபாஸின் சலார் படத்திலும் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இதனால் இவரால் தளபதி 67 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பிரேமம் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிவின் பாலி விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

தமிழில் நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி அதன் பின்பு நடித்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் மலையாள சினிமாவில் அவரது படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வரும் நேரத்தில் தற்போது லோகேஷ் தளபதி 67 படத்தில் நிவின் பாலியை புக் செய்துள்ளார்.