ஒற்றைக் கண் சிமிட்டும் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பிறகு பிரியா பிரகாஷ் வாரியர் ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவரது படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும் படக்குழுவினர் படத்தை முழுவதுமாக முடிந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.
தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் விஷ்ணுபிரியா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து ஹிந்தியில் மட்டும் இவர் 4 படங்கள் நடித்துள்ளார். இதில் யாரியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் மலையாளத்தில் மற்றும் 3 படங்கள் நடித்துள்ளார். அடுத்தடுத்து பிரியா பிரகாஷ் வாரியர்க்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருப்பதால் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறியுள்ளார்.
அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் அதற்கான கதையம்சம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் விரைவில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெட்ரூமில் இருந்து குட்டையான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பத்து வயதில் எடுத்த உடைய என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.