பிரியங்காவை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்.. இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்தும் ஏத்துக்கல

விஜய் டிவி சில ஆண்டுகளாகவே தங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் கொடுத்த வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஏழாவது முறையாக விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதில் சிறந்த ஆண் தொகுப்பாளர் ரக்சனுக்கும், பெண் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேக்கும் கொடுக்கப்பட்டது. விஜய் டிவியில் பெண் தொகுப்பாளர்கள் என்றால் பாவனா, ரம்யா, டிடி, ஜாக்லின், பிரியங்கா ஆகியோர் பணியாற்றினர். ஆனால் தற்போது பிரியங்கா மட்டுமே சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுவும் கடந்த ஆண்டு பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் அவர் தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா தொகுத்து வழங்கி வந்தார். மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பெண் தொகுப்பாளரான கேட்டகிரியில் யாருக்கு விருது கொடுப்பது என விஜய் டிவி திணறியுள்ளது. மேலும் தற்போது விஜய் டிவியில் ஒரே ஒரு பெண் தொகுப்பாளராக உள்ள பிரியங்காவுக்கு அந்த விருதை கொடுக்க முடிவு செய்து, விருதையும் வழங்கி உள்ளது.

பிரியங்கா தொடர்ந்து மூன்று முறை விஜய் விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் தற்போது நெட்டிசன்கள் விஜய் டிவியும், பிரியங்காவையும் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனென்றால் தற்போது பெருமளவில் விஜய் டிவியில் எந்த ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகவில்லை.

அதுவும் பிரியங்கா சிலமாதங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதன்பின்பும் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் வெளிநாடு மற்றும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் விஜய் டிவி பக்கமே வராத பிரியங்காவுக்கு சிறந்த பெண் தொகுப்பாளர் விருது கொடுத்தால் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.