குட் பேட் அக்லி 9 மணி காட்சி வெளியாகுமா.? விநியோகஸ்தர்கள் வைத்த செக்

Ajith : அஜித்தின் துணிவு படம் நள்ளிரவு ஒரு மணி காட்சி வெளியிடப்பட்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படம் 9 மணி காட்சி தான் திரையிடப்பட இருக்கிறது.

மேலும் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களை உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு வருகிறது. இந்த சூழலில் மதுரையில் ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய்க்கு நிர்ணயிக்க வேண்டும்.

குட் பேட் அக்லி படம் 9 மணி காட்சி வெளியாவதில் சிக்கல்

இல்லையென்றால் முதல் காட்சி அனுமதிக்கப்படாது என்றும், மதியம் 12 மணிக்கு தான் முதல் காட்சியை திரையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர்.

ஆனால் மல்டிபிளக்ஸ் போன்ற திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை 190 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தனி திரையரங்குகளில் 500 ரூபாய்க்கு டிக்கெட் நிர்ணயத்தால் எப்படி விற்பனையாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் அதிகாலை காட்சி மதுரையில் திரையிடக்கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஆகையால் 9 மணி காட்சி வெளியாவதில் சிக்கல் உள்ளது.