பரதேசி, எச்ச என மேடையில் படுகேவலமாக மல்லு கட்டிய K. ராஜன்.. பயில்வானுடன் பப்ளிசிட்டிக்காக நடந்த கூத்து

பத்திரிக்கையாளர், நடிகர் போன்ற பன்முகம் கொண்ட பயில்வான் ரங்கநாதன் இப்போது சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். அதில் திரை மறைவில் நடக்கும் பல விஷயங்களை இவர் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார். அதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு விழாவில் இவருக்கும் தயாரிப்பாளர் கே ராஜனுக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தயாரிப்பாளர் ராஜன் ஒரு பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பொதுவாகவே இவர் கல்யாணம், காதுகுத்து இப்படி எந்த விழாவுக்கு சென்றாலும் பெரிய நடிகர்களையோ அல்லது தேவையில்லாத ஏதாவது ஒரு விஷயத்தையோ பற்றி பேசி புது பிரச்சனையை கிளப்புவார்.

அந்த வகையில் நேற்று அவர் கலந்து கொண்ட விழாவில் துரதிஷ்டவசமாக பயில்வானும் இருந்தார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வாய்க்கால் தகராறு சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். தனித்தனியாக பேசும் போதே ஒருவரை பற்றி ஒருவர் மாறி மாறி திட்டிக் கொள்வார்கள். இதில் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் சொல்லவா வேண்டும்.

பலரும் எதிர்பார்த்தது போன்றே இருவருக்கும் இடையே மேடையிலேயே பலத்த சண்டை ஏற்பட்டது. அதில் தயாரிப்பாளர் ராஜன் பயில்வனை பார்த்து மாமா பய, பரதேசி, எச்ச, நாய் போன்ற மோசமான வார்த்தைகளை உபயோகித்து திட்டி தீர்த்தார். இதனால் கடுப்பான பயில்வான் பதிலுக்கு அவரை விமர்சித்தார்.

ஆனால் அங்கு இருந்தவர்கள் பயில்வனை சமாதானப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதன் பிறகு வெளியில் வந்த பயில்வானிடம் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் ராஜன் எப்போதுமே நான் இல்லாத போது என்னை விமர்சித்து வருகிறார்.

அவருக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் ஒரு பேட்டியில் என்னுடன் பேசட்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் இப்படி பப்ளிசிட்டிக்காக பேச வேண்டாம் என்று ஆத்திரத்துடன் கூறினார். மேலும் அவர் தன் குடும்பத்தை விட்டு விட்டு எதற்காக ஹோட்டலில் தங்க வேண்டும் என்றும் அவருக்கும் பெண் சகவாசம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ராஜனிடமும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பயில்வான் நடிகைகளை பற்றியும், தாய்மார்களை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இது போன்ற ஆட்களை சும்மா விடக்கூடாது என்ற ரீதியில் பேசினார். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த இந்த தகராறு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் ரசிகர்கள் பலரும் பயில்வானுக்கு தான் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.