வாயைத் திறந்த ஜனநாயகன் தயாரிப்பாளர்.. படம் எப்படி வந்திருக்கு தெரியுமா?

Vijay : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் மீது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் கிட்டத்தட்ட 275 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜனநாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கிறார். இந்த சூழலில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான KVN ப்ரொடக்ஷன்ஸ் வெங்கட் கே நாராயணன் இந்தப் படத்தைப் பற்றிய சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதுகுறித்து பேசிய நாராயணன் ஜனநாயகன் படம் விஜய் செல்வாக்கின் ஈர்ப்பை பிரதிபலிக்கும். மேலும் அழுத்தமான கதையை சொல்லும் என்பதில் உறுதி அளிக்கிறேன்.

ஜனநாயகன் படத்தைப் பற்றி கூறிய தயாரிப்பாளர்

தொலைநோக்கு பார்வையை நிறைவு செய்வது அனிருத் ரவிச்சந்திரனின் இசை. படத்தின் தாக்கம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றை உயர்த்துவதற்கு அனிருத்தியும் இசை பக்கவலமாக இருக்கிறது.

மேலும் ஜனநாயகனின் பயணம் விரிவடையும் போது ஒன்று தெளிவாகிறது. விஜய் இதன் மூலம் பிரியாவிடை கொடுக்கவில்லை. இது ஒரு சினிமா சல்யூட் மற்றும் கொண்டாட்டம் தான். விஜய்யின் கதாபாத்திரம் மிகவும் வெயிட்டானதாக இருக்கும்.

ஜனநாயகன் படம் நன்றாக வந்திருப்பதாக தயாரிப்பாளர் கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் ஒரு வசூல் சாதனை செய்யும் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.