தயாரிப்பாளர்கள் சாபத்தை வாங்கிய உதயநிதி.. ரெட் ஜெயண்டால் அதிருப்தியில் இருக்கும் பெரும் முதலாளிகள்

 Udhayanidhi: உதயநிதி நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிறார். இதில் அவருடைய ஆணிவேராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதன் மூலம் நிறைய படங்களை விநியோகம் செய்து கொடிகட்டி பறந்து வருகிறார்.

உதயநிதி நினைத்தால் தான் தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மேலும் உதயநிதி அரசியலில் படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி தான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்திடம் கணக்கு வழக்கு எல்லாமே சரியாக இருக்கிறது.

மேலும் பணத்தையும் நிறைய நாட்கள் இழுத்து அடிக்காமல் உடனுக்குடனாக கொடுத்து விடுகிறார்கள். ஆனால் இப்பொழுது ஒரு சில தயாரிப்பாளர்கள் உதயநிதியை கரித்து கொட்டி வருகின்றனர். காரணம் உதயநிதி வெளியிடும் படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட் மற்றும் உச்ச நடிகர்களின் படங்களாக தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. இப்போது கூட திரையரங்குகளில் மாவீரன் மற்றும் ஜெயிலர் படங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சின்ன தயாரிப்பாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களின் படங்களை வாங்கவும் யாரும் இல்லை, தியேட்டரும் கிடைக்கவில்லை. இதனால் கஷ்டப்பட்டு வட்டிக்கு பணம் வாங்கி படத்தை எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் புலம்பி தவித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் உதயநிதி தான் காரணம் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

தங்கள் படத்தையும் அவர் விநியோகம் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் பெரிய படங்களை மட்டுமே திரையிட்டு எங்களின் வயிற்றுப் பிழைப்பில் அடிப்பதா என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் நாங்கள் பழையபடி நன்றாக வாழ்வது உதயநிதியின் கையில் தான் இருக்கிறது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.