விக்ரமை கண்டாலே தெறித்து ஓடும் முதலாளிகள்.. எல்லா பக்கமும் அடித்து விரட்டும் கெட்டநேரம்

Producers run away when they see Vikram: சினிமாவில் வெற்றிக்காக போராடும் பல நடிகர்களுக்கு மத்தியில் அதற்கான யுக்தியை கண்டுபிடித்து உடலை வருத்தி தனக்கு வந்த கதாபாத்திரங்களை கணக்கச்சிதமாக நடித்துக் கொடுக்கக் கூடியவர் தான் விக்ரம். அதனால் தான் பல போராட்டங்களுக்குப் பிறகும் இவரால் முன்னணி ஹீரோவாக ஜொலிக்க முடிந்தது.

ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ சமீபத்தில் வந்த படங்கள் எல்லாம் வந்த சுவடு தெரியாமலேயே மறைந்து விட்டது. ஆனாலும் தளர்வாகாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த விக்ரமுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம்.

இப்படம் ஒட்டுமொத்த வெற்றியையும் கொடுத்தது மட்டுமில்லாமல் விக்ரம் மறுபடியும் சினிமாவில் தலை தூக்க ஒரு ஊன்றுகோலாக அமைந்தது. இதனை வைத்து எப்படியாவது அடுத்தடுத்த படங்கள் மூலம் வெற்றியை கொடுத்து இவருடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

இதற்கு இடையில் பல வருடங்களாக நிலுவையில் இழுத்தடித்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்தார். ஆனால் துருவ நட்சத்திரத்தில் இருந்து இவருடைய கெட்ட நேரம் ஆரம்பித்ததா என்னமோ தொடர்ந்து பல சறுக்குகளை தழுவிக்கொண்டு வருகிறார்.

அதனாலையே விக்ரம் தற்போது தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு செண்டிமெண்டாக விக்ரம் ராசி இல்லாதவர் என்று பார்க்கப்படுகிறார். காரணம் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான், கோப்ரா, ஸ்கெட்ச் போன்ற படங்கள் எதுவுமே சரியில்லாமல் மொத்தமாக சொதப்பி விட்டது.

இதனை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் 61 வது படமாக தங்கலான் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இந்த படமும் ஒருவேளை ஓடவில்லை என்றால் மொத்தமாக சினிமாவில் விக்ரமின் சாப்டர் காலியாகிவிடும். இவரிடம் எவ்வளவோ திறமைகள் கொட்டி கிடந்தாலும் கெட்ட நேரம் இவரை வாட்டி வதைக்கிறது.