ரஜினியை வைத்து பிசினஸ் செய்த தயாரிப்பாளர்கள்.. சரியான நேரத்தில் உதவிய நண்பன்

சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு மிகப்பெரும் சக்தி இருக்கிறது. அதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பதற்கு பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் காத்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி ரஜினி படம் என்றாலே வியாபாரம் எகிறும் என்ற ஒரு சூழலும் இப்போது இருக்கிறது.

இதன் மூலம் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் பிசினஸையும் பெருக்கிக் கொள்ள முனைகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆயுதம் தான் சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகை. எப்படி என்றால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை பல வருடங்களாகவே ரசிகர்கள் முன் வைத்து வந்தனர்.

ஏனென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சினிமா பிரபலங்கள் அரசியலில் வெற்றிவாகை சூடினார்கள். அதை வைத்து ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இருப்பினும் நிதானமாக இருந்த ரஜினி சில கட்டாயத்தின் பெயரில் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக கூறினார்.

அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓட வைக்க இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர். மேலும் ரஜினியின் நெருக்கமான உறவுகளும் கூட அவர்களுடைய ஆசையின் பெயரில் இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருக்கிறார்கள். இப்படி சில காரணங்களால் தான் ரஜினி அரசியலுக்கு வர இரு மனதாக சம்மதித்தாராம்.

அந்த சமயத்தில் அவருடைய நெருங்கிய நண்பரான சிரஞ்சீவி அவருக்கு ஒரு ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதாவது ரசிகர்கள் வேறு மக்கள் வேறு. இதை நான் அரசியலுக்கு வந்த பிறகுதான் உணர்ந்து கொண்டேன். எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் ஆனாலும் என்னால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

நீ எப்போதும் அமைதியை விரும்புபவன், யாரிடமும் சண்டை போட மாட்டாய். யார் மீதும் கோபப்பட மாட்டாய், அப்படி இருக்கும் உனக்கு அரசியல் சரிப்பட்டு வராது எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகும் கூட ரஜினி அரசியல் முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்தார். சில காலங்களுக்கு பிறகே இந்த உண்மை அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது. அந்த வகையில் இப்போது அவர் தெளிவான ஒரு முடிவை எடுத்துள்ளார்.