Ishari Ganesh : ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என பல வெற்றி படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கொடுத்திருக்கிறார்.
இப்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்கிறார். ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து இரண்டு மூன்று படங்கள் கமிட் செய்திருந்தார். ஆனால் அவர் டேட் கொடுக்கவில்லை என்று மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது.
இதை அடுத்து சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி இருந்தார். இந்த சூழலில் ஓடுற குதிரையில் பந்தயம் கட்ட வேண்டும் என்பது போல ஹிட் படங்களை கொடுத்து வரும் தனுஷின் படங்களை கைப்பற்றி இருக்கிறார்.
ஐசரி கணேசால் பரிதவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்
அதாவது தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜி ஸ்டுடியோ தயாரிப்பில் நடிக்க இருந்தார். அதேபோல் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது இந்த இரண்டு படங்களையும் ஐசரி கணேஷ் கைப்பற்றி விட்டாராம். ஏனென்றால் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இட்லி கடை படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இது தவிர குபேரா படமும் தனுஷ் லைன் அப்பில் இருக்கிறது. ஆகையால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் கண்டிப்பாக மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால் அந்த தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஐசரி கணேஷ் பேசி இந்த படங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனங்களும் படத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.