Actress Nayanthara: நயன்தாரா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு அவருடைய வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரு பக்கம் சினிமா வாழ்வு சிறப்பாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது.
அந்த வகையில் திருமணம், குழந்தைகள் என சர்ச்சைகளை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவனால் அவ்வப்போது மன நிம்மதி இழந்தும் தவித்து வருகிறார். அதிலும் அஜித் பட வாய்ப்பு கைவிட்டு போனதிலிருந்து பல விமர்சனங்கள் இந்த ஜோடியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
அதில் தற்போது புது பஞ்சாயத்து ஒன்று முளைத்திருக்கிறது. அதாவது நயன்தாராவின் மாமனார் சொத்துக்களை ஏமாற்றி விட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது. விக்னேஷ் சிவனின் அப்பா சிவக்கொழுந்து தற்போது உயிருடன் இல்லை. ஆனால் போலீஸ் கண்காணிப்பாளராக இருந்த அவர் உயிரோடு இருந்தபோது தங்கள் சொத்தை ஏமாற்றியதாக அவருடைய உறவினர்கள் இப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கொடுத்துள்ள புகாரில் விக்னேஷ் சிவனின் அப்பா சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கே தெரியாமல் அவர்களின் சொத்தை அபகரித்து விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது அவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரின் மனைவி, மகள் உட்பட விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நயன்தாரா, விக்கி திருமணம் நடந்த சமயத்தில் நெருங்கிய உறவினர்கள் கூட தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அதாவது விக்னேஷ் சிவன் சொந்த ரத்த உறவுகளை கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு காரணம் நயன்தாரா தான் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. அதைத்தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கிய நயன் கோவில், பரிகாரம் என்று அனைத்தையும் செய்தார். அதன் பிறகும் கூட இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் விக்னேஷ் சிவனால் மொத்த நிம்மதியும் போன நிலையில் இருக்கிறாராம் லேடி சூப்பர் ஸ்டார்.