குலசேகரபட்டினத்தில் புஷ்பா-2, அல்லு அர்ஜுனை பார்த்து ஆட்டம் காணும் பிசினஸ்.. 1000 கோடி வசூலுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Pushpa 2 made a foundation of thousand crores after watching the teaser: தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை விறுவிறுவென தயாரித்து வந்தனர் பட குழுவினர்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த 2021 டிசம்பரில் செம்மர கடத்தலை கருவாகக் கொண்டு வெளியான திரைப்படமே புஷ்பா. 

யாருக்கும் அடங்காதவனாக ஆட்டம் போடும் நாயகன், அவனது மேனரிசம் மற்றும் சாதூர்யமான புத்தி கூர்மையினால் பிரச்சனைகளை கையாளும் விதம்,

சினிமா ஆர்வலர்களுக்கு புதுமையாக இருக்கவே வசூல் மழை பொழிந்து புஷ்பாவை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள்.

படத்தின் முடிவிலேயே அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த புஷ்பா, இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது. 

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தெறிக்க விட வருகிறது புஷ்பா 2.

சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் பரிசாக புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு.

நம் மாநிலத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவில் பக்தர்கள் பெண்வேடமிட்டு காளியாட்டம் ஆடுவது போல்,

தெலுங்கானாவின் திருவிழாவான ஜாதரா காட்சியை பெண் வேடமிட்டு அல்லு அர்ஜுன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

அதே வேடத்தில் அமைந்த அவரது நடிப்பு, ஆக்சன் என மொத்தமும்  ரசிகர்களை கவர்ந்து பல  பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட புஷ்பா 2 ஓடிடி உரிமை

ஆக்ரோஷமான ஆக்சன் உடன் குத்தாட்டம் போட்ட அல்லு அர்ஜுனின்  வீடியோ ஏகபோகமாக வைரல் ஆனதால் இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளம் 100 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம்.

தெலுங்கு சினிமாவில் 100 கோடி ஓடிடி உரிமையை பெற்று முதல் படம் என்ற பெருமையை அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2  பெற்றுள்ளது.

ஓடிடி மட்டுமே 100 கோடிக்கு விலை போய் உள்ளதால் இன்னமும் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி எனபல மொழிகளிலும் ரிலீசாகும் பட்சத்தில்,

கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் பிசினஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் புஷ்பா 2 பட குழுவினர்.

புஷ்பா 2 படத்தின் மீதான ரசிகர்களின் வெறித்தனமான ஆர்வத்தால் மற்ற  நடிகர்கள் தங்களது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.