புலி மட்டுமல்ல புஷ்பாவே விலகிட்டாரு.. ஃபையர் தாடியை சேவ் செய்து எஸ் கேப்பான அல்லு அர்ஜுன் 

Allu Arjun: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வெளியாகி இருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களாக தயாராகி வருகிறது.

சமீபத்தில் கூட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஏகப்பட்ட பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆனது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென டிசம்பர் 6ஆம் தேதிக்கு அதை ஒத்தி வைத்தனர்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி பார்த்தால் படம் இன்னும் தாமதமாகும் போல் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான். ஏனென்றால் சில காட்சிகளை திரும்பவும் படமாக்க வேண்டும் என இயக்குனர் அல்லு அர்ஜுனிடம் 50 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.

இயக்குனர் மீது கோபப்பட்ட அல்லு அர்ஜுன்

ஆனால் அவ்வளவு நாட்கள் தர முடியாது மூன்று கேமரா யூனிட் வைத்து ஒரு 20 நாட்களுக்குள் படத்தை முடித்து விடுங்கள் என அவர் சொன்னாராம். இயக்குனர் அதற்கு மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுன் தன்னுடைய தாடியை ஷேவ் செய்துவிட்டு குடும்பத்தோடு சிங்கப்பூர் பறந்து விட்டாராம். இதனால் மேலும் கோபமான இயக்குனர் ஒரு பக்கம் தன் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று உள்ளார்.

அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் நிலையில் அல்லு அர்ஜுன் ஐரோப்பா டூர் செல்ல போகிறாராம். இப்படி மாறி மாறி இருவரும் வெளிநாடு செல்லும் நிலையில் படம் திரைக்கு வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புஷ்பா 2 ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட சிக்கல்