ராசி கண்ணா நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று தொடர்ந்து திரையரங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதனால் தற்போது ராசி கண்ணாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகின்றன.
ராசி கண்ணா தொடர்ந்து கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் இனிமேல் கதாநாயகர்களின் படங்களில் நடிக்காமல் தனித்துவமான கதைகளில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். அதாவது ராசி கண்ணா இனிமேல் மற்ற நடிகைகளைப் போல கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே திட்டமிட்டுள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

அந்த மாதிரியான படங்களில்தான் ரசிகர்கள் தற்போது எதிர்பார்க்கிறார்கள் எனவும் படம் பெரிய வெற்றி பெற வேண்டுமென்றால் வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதற்காக தொடர்ந்து ராசி கண்ணா பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். மேலும் இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களிலும் சமுதாய கருத்துகளும் கூறக்கூடிய கதைகளில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது ராசி கண்ணா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து மற்ற நடிகைகளைப் போலவே ராசிக் அண்ணாவும் கவர்ச்சியில் இறங்கி உள்ளார் எனவும் இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.