அடுத்த வாட்டி வரும்போது குடிக்காம வாங்க.. ராதாரவியை அவமானப்படுத்திய விஜய்யின் போன் கால்

நடிகர் ராதாரவி எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக போட்டு உடைக்க கூடியவர். இதனாலேயே இவர் பல பிரச்சனைகள் சிக்கி உள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறிய விஷயம் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சர்கார் படம் வெளியாகி இருந்தது.

இப்படம் அரசியல் படமாக எடுக்கப்பட்டிருந்ததால் அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டும் இன்றி படம் வெளியாகவே பல எதிர்ப்புகள் நிலவியது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மேலும் சர்கார் படத்தில் ராதா ரவியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆகையால் அந்த படத்தில் நடிக்கும் போது அவருடைய பேரக்குழந்தை விஜய்யின் தீவிர ரசிகராக இருந்ததால் அவரைப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் ராதா ரவியும் தனது பேரனை அழைத்துக்கொண்டு சர்கார் படப்பிடிப்புக்கு சென்றாராம்.

ஆனால் விஜய் மேக்கப் ரூமில் இருந்ததால் அவரை பார்க்க படக்குழு அனுமதிக்க வில்லையாம். அதன் பிறகு விஜய்யின் அனுமதியோடு அவரது வீட்டிற்க்கே சென்று தனது குடும்பத்தினருடன் ராதாரவி சென்று வந்தாராம். இதனால் அவரது பேரனும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாக ராதாரவி கூறியிருந்தார்.

இந்நிலையில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பங்குபெறும் போது ராதாரவிக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக மயக்கம் வந்துள்ளதாம். அப்போது பின்னால் இருந்து விஜய் தான் ராதாரவியை பிடித்து அமர வைத்தாராம். இதனால் விஜய்க்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை என மறுநாள் போன் போட்டுள்ளார்.

அப்போது விஜய்யின் பிஏ தான் அந்த போன் காலை எடுத்தாராம். அப்போது சர்கார் இசை வெளியீட்டு விழாவில் குடித்துவிட்டு வந்தது போல இப்போது வராதீர்கள் என அசிங்கப்படுத்தி விட்டாராம். உடனே கோபத்தில் ராதாரவி நான் வரவே இல்லை என போனை கட் செய்து விட்டாராம். இவ்வாறு விஜய்யின் பிஏவால் அவமானப்பட்ட விஷயத்தை அந்த பேட்டியில் ராதாரவி போட்டு உடைத்திருந்தார்.