பூவே உனக்காக தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவில் பிறந்து இவர் பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே இவருக்கு நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
கன்னடத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ராஜா லவ்ஸ் ராதே படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தமிழில் எம்பிரான் படத்தில் நடித்திருந்தார். மோனிகா ப்ரீத்தி என்ற இயற்பெயரை சினிமாவுக்கு வந்ததும், ராதிகா ப்ரீத்தி என்று இயக்குனர்கள் மாற்றிவிட்டார்கள்.
இந்நிலையில் ராதிகா ப்ரீத்தி சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்காக துணை இயக்குனரிடம் 5 லட்சம் கொடுத்துள்ளார். 5 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு இயக்குனர் தலைமறைவாகி விட்டார்.
ராதிகா ப்ரீத்தி அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர். மாநில அளவில் பேட்மின்டனும், மாவட்ட அளவில் வாலிபாலும் விளையாடி உள்ளார். தேசிய அளவில் 5 முறை த்ரோபால் விளையாடி உள்ளார். த்ரோபாலில் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
இவ்வளவு திறமை கொண்ட ப்ரீத்தி அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாமே என கேட்டதற்கு ஆடி கார் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அரசாங்க வேலையில் மாதம் சம்பளம் மட்டுமே வரும். ஆனால் திரைத்துறையில் சம்பாதித்தால் ஆடி காரும் வாங்கலாம், பிரபலமும் அடையலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று யோசித்து உள்ளார் ப்ரீத்தி.
