லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் கதையை எடுப்பது தான் லோகேஷின் ஸ்டைல். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படத்திற்கு மிக மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்.
இது ஒரு பக்கத்தில் இருக்க இவரின் படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் பெறுவதால் இவர் அடுத்த கட்டமாக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பொதுவாகவே சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள். அதே மாதிரி தற்போது லோகேஷ் படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் இப்பொழுது தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
லோகேஷின் கதை மற்றும் திரைக்கதையில் இயக்குனர் ரத்னகுமார் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவருக்கு ஜோடியாக முதன் முதலில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் லோகேஷ்காக இந்த படத்தில் இயக்க உள்ளார்.
ஆனால் ஏற்கனவே நயன்தாரா பிஸியாக இருப்பதால் இவரின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானிடம் இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் அமைக்க திட்டம் தீட்டி வருகிறார்கள்.
மேலும் இந்த படம் க்ரைம் மற்றும் திரில்லர் மூவியின் கதையாக உருவாக்கப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் ரொம்ப பிசியாக இருந்தாலும் அவரின் தயாரிப்பில் வருவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது. ஏற்கனவே லாரன்ஸ் கிரேம் மூவியில் மட்டுமே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் இரண்டு,மூன்று படங்களில் நடிக்க இருப்பதால் அந்தப் படங்களை முடித்துவிட்டு லோகேஷின் அடுத்த படத்தில் இணைகிறார். மேலும் லாரன்ஸ் கிரேம் மூவியை தொடர்ந்து எடுப்பதால் இந்த படமும் அவருக்கு மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் படமாக அமையும்.