சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கூட ஒரு ரோல் மாடலாக தான் இருக்கிறார். அவருடைய ஸ்டைல் போன்ற பலவற்றையும் இப்போது இருக்கும் நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவருடைய சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்கவும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ரஜினியின் சிஷ்யனாக இருக்கும் ராகவா லாரன்ஸ் ராகவேந்திரா சாமியை வணங்குவதிலிருந்து பல விஷயங்களில் அவரை பின்பற்றுகிறார். மேலும் சூப்பர் ஸ்டாரை போலவே பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர். அதிலும் யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டாலே இவர் சம்பந்தமில்லாமல் ஓடி வந்து உதவி செய்வார்.
அப்படித்தான் இப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக சமீபத்தில் அவரே ஒரு வீடியோ வெளியிட்டு உதவி கேட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சூர்யா அவருக்காக 2 லட்ச ரூபாயை உடனடியாக கொடுத்து உதவி செய்தார்.
அதேபோல் விஷயம் கேள்விப்பட்ட ரஜினியும் தயாரிப்பாளருக்கு போன் போட்டு ஆறுதல் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன். எதற்கும் பயப்படாதீர்கள், அனைத்து செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன், தைரியமாக இருங்கள் என்று நம்பிக்கை வார்த்தை கூறியிருக்கிறார்.
சமீப காலமாக ரஜினி சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். எப்போதுமே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருக்கும் அவர் வயது ஏற ஏற சில விஷயங்களையும் மாற்றி வருகிறார். அதிலும் அனைவரிடமும் அன்பாக பழகுவது என புது உற்சாகத்துடன் இருக்கிறார். அதனாலேயே அவர் பிதாமகன் தயாரிப்பாளரின் நிலையை அறிந்து உதவி செய்ய முன் வந்திருக்கிறார்.
ஆனால் அதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளருக்கு ஐந்து லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. எந்த சம்பந்தமும் இல்லாமல் விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே ஓடி வந்து உதவி செய்த லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் குருவையே மிஞ்சிய சிஷ்யனாக மாறி இருக்கிறார். இதுவே ரசிகர்கள் மத்தியில் அவருக்கான நன்மதிப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.