ஜப்பான் நிலநடுக்கத்தில் மாட்டிய ராஜமவுலியின் செல்லப்பிள்ளை.. குடும்பத்துடன் சிக்கிய சம்பவம்

Director Rajamouli: பிரம்மாண்ட பட்ஜெட் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது ராஜமவுலி தான். ஆனாலும் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும் அதைவிட பல மடங்கு லாபத்தை தனது படத்தின் மூலம் ராஜமவுலி கொடுத்துவிடுவார். அதனால் தான் தயாரிப்பாளர்கள் அவரது படம் கிடைக்காதா என காத்துக் கிடக்கின்றனர்.

இந்த சூழலில் சமீபத்தில் ஜப்பானில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால் ஜப்பானில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தது. மேலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதித்திருக்கிறது.

இந்த ஜப்பான் நிலநடுக்கத்தில் ராஜமவுலியின் செல்லப் பிள்ளையும் சிக்கி இருந்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றதுடன், ஆஸ்கர் விருதையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜூனியர் என்டிஆர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஜப்பான் சென்றிருந்தார். அப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் தான் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பத்திரமாக வீடு திரும்பியதாக பதிவிட்டிருக்கிறார். மேலும் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகுந்த அச்சம் அடைந்ததாகவும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் குணம் அடைய வேண்டும் என்றும் அந்த பதிவில் ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டார். இப்போது ஜூனியர் என்டிஆர் வீடு திரும்பியது அவரது ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.