பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி படத்தில் நடித்து விட வேண்டும் என டாப் நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜமவுலி இந்த தமிழ் நடிகரின் படத்தை நான் எடுக்க வேண்டும் என விரும்பி உள்ளார். பாகுபலி படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஜமவுலி இதைத்தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.
மேலும் பிரபாஸுக்கு பாகுபலி படம் எப்படி பெயர் வாங்கி கொடுத்ததோ அதேபோல் ராம்சரணுக்கும் ஆர் ஆர் ஆர் படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகி வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமவுலி கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குனர் மற்றும் நடிகர் பற்றி ராஜமவுலி மனம் திறந்து உள்ளார். அதாவது இயக்குனர் வெற்றிமாறனை பார்த்து பிரமித்து போனதாக பல மேடைகளில் ராஜமவுலி கூறியுள்ளார். தனுஷின் சினிமா கேரியரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் தான்.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தனுசுக்காக வெற்றிமாறன் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மிகவும் தத்ரூபமாக இருந்ததாகவும், வேறு யாராலும் இந்த படத்தை இவ்வளவு அழகாக எடுத்து விட முடியாது என ராஜமவுலி கூறியிருந்தார்.
எப்படி தமிழ் இயக்குனர்களில் வெற்றிமாறன் பிடிக்குமோ அதேபோல் தமிழ் நடிகரில் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ராஜமவுலி கூறினார். மேலும் அவருடைய திறமையால் தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றும் வருங்காலங்களில் வாய்ப்பு கிடைத்தால் தனுஷ் படத்தை தான் இயக்க வேண்டும் என்றும் தனது ஆசையை சொல்லி உள்ளார்.
ஒரு பிரம்மாண்ட இயக்குனர் தானாகவே முன்வந்து தனுஷ் படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது ஆச்சரியமான விஷயம். தனுஷ், ராஜமவுலி படத்தில் நடிக்க சம்மதித்தால் படம் எப்படி உருவாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களுக்கு வந்து விட்டது. வருங்காலங்களில் இந்தக் கூட்டணி இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.