விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்

Vijay-Ajith-Rajini: சோசியல் மீடியாவில் இப்போது விஜய்யின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய செயல்பாடுகள் ஏற்படுத்தும் பரபரப்பு தான். இந்த சூழலில் முக்கிய புள்ளிகள் அனைவரும் ஜெர்க் ஆகக்கூடிய ஒரு சம்பவமும் நடக்க இருக்கிறது.

அதாவது விஜய் அரசியலுக்கு வருவதில் இப்போது அதிக தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான முதல் படியாக தான் அவர் மாணவர்களை சந்தித்தது. அதை தொடர்ந்து அவருடைய மக்கள் இயக்கம் தற்போது பல வழிகளிலும் ஓட்டுக்களை பெறுவதற்கான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி விஜய்யும் சமீபத்தில் நடந்த லியோ சக்சஸ் மீட் விழாவில் அதற்கான அச்சாரத்தை வலுவாக போட்டார். அதில் ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் அவர் பேசியிருந்தது சரியாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதாவது இப்போது அவர்களின் ரசிகர்களும் விஜய்க்கு சப்போர்ட் செய்ய இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மாணவ மாணவிகள் அனைவரும் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து பாண்டிச்சேரி, கேரளா என அனைத்து மாநிலங்களில் இருக்கும் யூத் ரசிகர்களும் விஜய்க்காக ஒன்று கூட இருக்கின்றனர். அவர்களின் துணையோடு தான் கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்காக விஜய் பொதுமக்களை அடிக்கடி சந்திக்கவும் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வருகிறதாம். அந்த அளவுக்கு அவர் சரியாக காய் நகர்த்தி தன் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். மேலும் இதுவரை எந்த நடிகரும் இந்த அளவுக்கு ஒரு முன்னேற்பாடுடன் வந்ததே கிடையாது என்னும் அளவுக்கு பேச்சுக்கள் கிளம்பி கொண்டிருக்கிறது.

இதில் ரஜினி, அஜித் இருவரும் விஜய்க்கு சப்போர்ட் செய்ய இருப்பதும் உறுதியாகியுள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என சினிமா பிரபலங்கள் பேசி வருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட சில முக்கிய புள்ளிகள் அடுத்து என்ன நடக்கும் என கவனித்து வருகின்றனர். இவ்வாறு இந்திய அளவில் ஒரு சம்பவத்திற்கு விஜய் தயாராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.