பெரிய எதிர்பார்ப்புடன் இந்த வருட சுதந்திர தினத்திற்கு வெளிவர இருக்கிறது ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் எப்படியும் ஆயிரம் கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோஷன் வெளிவந்து சமூக வலைதளத்தை ஒரு கை பார்த்தது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவு வியூஸ் வந்து குவிந்தது. கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என எகிறிய லோகேஷ் கிராப் இறங்கவே இல்லை.
இது போக லோகேஷ் கைவசம் ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் குவித்து வைத்திருக்கிறார். கைதி 2 ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி போன்ற படங்கள் அடுத்தடுத்து இயக்க உள்ளார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் கூலி படத்தை முடித்துவிட்டு அதற்குண்டான வேலையிலும் இறங்கவிருக்கிறார். இந்நிலையில் கூலி படத்தில் சன் பிக்சர்ஸ் அவருக்கு கொடுத்த சம்பளம் வெளிவந்துள்ளது.
நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கொடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்டால் ரஜினியின் சம்பளம் இந்த படத்தில் ஏறியுள்ளது. கூலி படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 260 கோடிகள். லோகேஷ் கனகராஜுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 60 கோடிகள். இப்படி பெரும் தொகையை அளித்ததற்கு பின்னால் மற்றுமொரு படத்தை இதே கூட்டணியில் உருவாக்க சன் பிக்சர்ஸ் திட்டம் போட்டுள்ளது.