Ramya kirshnan: இன்று ரஜினியின் ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருக்கிறார். அதன்படி அவருடைய தோற்றமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும் ஜெயிலர் படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பது மிகவும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் ரம்யா கிருஷ்ணனின் சினிமா கேரியரை எடுத்துக் கொண்டால் முதலில் சொல்லும் படம் படையப்பா தான். ஒரு பெண் இப்படி வில்லியாக நடிக்க முடியுமா என்பதை நிரூபித்து காட்டி இருந்தார்.
அதாவது படையப்பா படத்தில் சில இடங்களில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நீலாம்பரி கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். அந்த படத்தில் ரஜினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்ற நீலாம்பரி, கடைசி வரை ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
ஆனால் பல வருடம் கழித்து ஜெயிலர் படத்தில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் மனைவியாகத்தான் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். பலரும் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்திருக்கும் இரண்டாவது படம் தான் ஜெயிலர் என கருதுவார்கள்.
ஆனால் படையப்பாவுக்கு முன்பே இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதாவது படிக்காதவன் படத்தில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அதன் பிறகு தான் படையப்பா இப்போ ஜெயிலர் என மூன்றாவது முறையாக ரஜினியின் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்ல படிக்காதவன், படையப்பா இரண்டுமே மிகப்பெரிய ஹிட் பெற்றது.
அந்த வகையில் ஜெயிலர் படமும் ஹட்ரிக் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று காலை முதலே கொடுக்கும் அலப்பறையை பார்க்கும் போது நிச்சயமாக ரஜினி ரசிகர்களை தாண்டி அனைத்து ரசிகர்களையுமே ஜெயிலர் படம் கவரும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.