சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டதாக சொன்ன நிலையில் தற்போது விடுபட்ட சின்ன சின்ன காட்சிகளுக்காக ஒரு வார படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆனால் தற்போது அந்த படம் தொடங்குமா என்பதே சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரம். ஏற்கனவே ரஜினிக்கு சம்பளம் ரூ 100 கோடி. இதனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்த படப்பிடிப்பு செலவையும் 50 கோடிக்குள் சுருக்க வேண்டிய நிலை.
சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் செலவில் முன்ன பின்ன ஆனாலும் தாங்கிக் கொள்ளும். ஆனால் சோலோ தயாரிப்பாளர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான். அப்படித்தான் ரஜினியின் அடுத்த பட விவகாரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் கொஞ்சம் அப்செட்டில் உள்ளது.
ரஜினியின் சம்பளத்தை தாண்டி படத்தின் பட்ஜெட் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வருகிறதாம். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது தெரிந்தே புதைக்குழியில் விழுந்த கதைதான் என ஏஜிஎஸ் நிறுவனம் ஜகா வாங்கி விட்டதாம்.
இதனால் ரஜினி மற்றும் தேசிய பெரியசாமி படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் பாதியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த செய்தி சன் பிக்சர்ஸ் காதுக்கு எட்டினால், கண்டிப்பாக ரஜினியின் அடுத்தப் படத்தையும் அவர்கள் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
