தலைவரே நீங்க இப்படி செய்யலாமா.? அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினிக்கு வந்த பஞ்சாயத்து

Actor Rajinikanth: எந்த அளவுக்கு புகழ் வெளிச்சம் இருக்கிறதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் வந்து சேரும். இதுதான் உச்ச நடிகர்களின் நிலை. அதிலும் ரஜினி சாதாரணமாக ஏர்போர்ட் சென்றாலே அவரை பிடித்து வைத்து கேள்விகள் கேட்பது, போட்டோ எடுப்பது என மீடியாவின் கவனம் அவர் மீது தான் இருக்கும்.

அப்படி இருக்கும்போது அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா. கடந்த மூன்று தினங்களாக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு கலை கட்டியது. அதில் ஹாலிவுட், பாலிவுட் உட்பட தென்னிந்திய நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வளவு பெரிய பிரம்மாண்ட விழாவில் நம் சூப்பர் ஸ்டார் இல்லாமலா? தலைவரும் தன் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார். அதிலும் நம் தமிழ் பாரம்பரிய படி வேஷ்டி சட்டை அணிந்து அவர் விழாவில் கலந்து கொண்டது வைரலாகி வருகிறது.

Also read: ரஜினியின் வெற்றி ரகசியத்தை பின்பற்றும் அஜித்.. பூரித்துப்போய் தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்

அதே நேரத்தில் அங்கு நடந்த மற்றொரு சம்பவமும் சர்ச்சையாகியுள்ளது. அதாவது இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினி வந்தபோது மீடியாக்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் கூடவே ரஜினி வீடு பணிப்பெண் ஒருவரும் வந்திருந்தார்.

அப்போது மீடியாக்கள் போட்டோ எடுக்கும் போது ரஜினி அவரை கொஞ்சம் தள்ளிப்போ மா என சைகையில் சொல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த சில நெட்டிசன்கள் என்ன தலைவரே நீங்களே இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் ஊடகங்கள் பொது இடத்தில் பணிப்பெண்ணை ரஜினி அவமதித்தார் என்ற சர்ச்சையையும் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த தலைவரின் ரசிகர்கள் குடும்பமாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும் போது மூன்றாவது நபர் வந்தால் கொஞ்சம் தள்ளிக்கோங்க என்று சொல்வது சாதாரணமாக நடப்பது தான்.

அப்படித்தான் ரஜினியும் குடும்பமாக போட்டோ எடுக்கும் போது பணிப்பெண்ணை கொஞ்சம் தள்ளி நிற்க சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் வீண் வதந்தியை பரப்பாதீர்கள் என கொந்தளித்து வருகின்றனர்.

Also read: வேஸ்ட்டிலையும் வெள்ளை குர்தாலையும் அம்பானி பங்க்ஷனில் ரஜினி.. மகளுக்காக போடும் பிள்ளையார் சுழி