கூலி டைட்டிலுக்கு பின்னாடி இப்படி ஒரு ராசியா.? லோகி தலையை உருட்டும் ரஜினி வெறியர்கள்

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் இயக்கி வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வேட்டையன் படத்தை முடித்த தலைவரும் இதில் ஆர்வத்துடன் நடித்து வந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கூலி சூட்டிங் நிலவரம் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

ஆனால் லோகேஷ் சூப்பர் ஸ்டார் இல்லாத காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். தலைவர் பூரண குணமடைந்து வந்ததும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் வேறு ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் லோகி.

கூலி படத்தின் டைட்டில் சென்டிமென்ட்

அதாவது ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு கூலி என்ற தலைப்பில் ஒரு படம் வெளியானது. அதன் படப்பிடிப்பின் போது இதேபோல் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அதிலிருந்து அவர் மீண்டு வந்ததே பெரும் சவால்தானாம். அதே போல் தான் இந்த கூலி படப்பிடிப்பிலும் சூப்பர் ஸ்டாருக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களையும் ரசிகர்கள் தற்போது ஒன்றாக இணைத்து படத்தின் பெயரில் இருக்கும் ராசி தான் காரணம் என பேசி வருகின்றனர்.

ஏற்கனவே படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது சரத்குமார் நடிப்பில் இந்த பெயரில் படம் வந்திருக்கிறது. அதனால் லோகேஷ் வேறு பெயரை வைத்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது இந்த ராசி விவகாரத்தை வைத்து ரஜினி வெறியர்கள் அவர் தலையை உருட்டி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் நிலைக்கு லோகேஷ் தான் காரணமா.?

Leave a Comment