சமீபகாலமாக யூடியூப் பிரபலங்கள் தங்களை ஒரு ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு ஏதாவது ஒரு வகையில் வசமாக சிக்கி முன்னணி நடிகர்களின் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர்.
யூடியூபில் பல பேர் இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்தவராக வலம் வந்தவர் மதன் கௌரி. அன்றைய நாளில் நடக்கும் சுவாரஸ்யமான செய்திகளை தினமும் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் போட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார்.
மேலும் தனி ஒருவரின் யூடியூப் சேனல்களில் 5 மில்லியன் பார்வையாளர்கள் முதலில் வந்தது இவருக்குத்தான். இவர் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் பேசுவதை வைத்தும் தன்னுடைய யூடியூபில் பேசி வந்தார்.
இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் அரசியலில் மீண்டும் வரப்போவதில்லை என தெள்ளத்தெளிவாக தெரிவித்துவிட்டார். இதுகுறித்த மதன் கௌரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ரஜினி மக்கள் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு அரசியலுக்கு வரப் போவதில்லை என தெரிவித்து விட்டார் என்று கூறியிருந்தார்.
அப்போது ரஜினி சார் என்று சொல்லவில்லையாம். இதனை கவனித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரது சமூக வலைதள பக்க கமென்டுகளில் காதுகளில் கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதிலும் சில ரசிகர்கள், ஒன்னு ரஜினி சார் என்று சொல்லு, இல்ல தலைவர் என்று சொல்லு. உன்னோட வயசுக்கும் அவரோட சாதனைக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது, அவரை நீ ரஜினி என்று சொல்றியா எனத் திட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே இப்படித்தான் என மதன் கௌரியை வச்சு வாங்கி வருகின்றனர்.