குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா.? இரண்டு மாத கருவுடன் உயிர் நீத்த ரஜினி பட ஹீரோயின்

Actor Rajini: அழகாலும் தன்னுடைய, அசாத்தியமான நடிப்பு திறமையாலும் குறுகிய காலத்திலேயே முன்னணிக்கு வந்தவர் தான் இந்த நடிகை. ரஜினியுடன் இரு படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர் திடீரென மரணம் அடைந்தது இன்று வரை திரையுலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாக இருக்கிறது.

ஆனால் அவருடைய மரணம் இப்போது வரை பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறது. குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா என்ற ரீதியிலும் அவருடைய ரசிகர்கள் இப்போதும் ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகை தான் சௌந்தர்யா. ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு கன்னடத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் போதே திடீரென திருமணம் செய்து கொண்ட இவர் அரசியலிலும் களம் இறங்கினார். முன்னணி கட்சி ஒன்றுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகும்போது தான் இவருடைய மரணம் நிகழ்ந்தது. சுமார் 100 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சௌந்தர்யா மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போது அவர் இரண்டு மாத கருவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல முரண்பாடான செய்திகள் வெளியானது. அதாவது விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் அருகில் இருக்கும் ஹோட்டலில் வீணாக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதற்காக பறவைகள் வந்திருக்கிறது. அதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டது.

ஆனால் சம்பவம் நடந்த அந்த சமயத்தில் பறவைகள் தொந்தரவு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதனாலேயே இது அரசியல் ரீதியான சதி என்றும் கூறப்பட்டது. இது ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஏனென்றால் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு இரண்டு மாதம் முன்பாகவே அவருடைய கணவர் பெயரில் பெருவாரியான சொத்து மாற்றப்பட்டிருக்கிறது.

அதேபோன்று சௌந்தர்யாவின் அம்மா பெயருக்கும் சில சொத்துக்கள் மாற்றப்பட்டு உயில் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு அவசரமாக திருமணத்திற்கு முன்பு உயில் எழுத வேண்டிய அவசியம் என்ன, குடும்பத்துக்குள் அப்படி என்ன பிரச்சனை இருந்தது என்பது போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் இப்போதும் அவருடைய சொத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றார். இப்படி பல சந்தேகங்கள் அவருடைய மரணத்தை மர்மமாக பார்க்க வைத்துள்ளது.