சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடி கொட்டி தலை வழுக்கையானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவருக்கு ஏன் சீக்கிரமாக முடி கொட்டி விட்டது என்பதை அவரது மேக்கப்மேன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஒன்று நீளமாக முடி வளர்ப்பதும், அதை கையில் கோதி விடுவதும் தான். அதுதான் முடி கொட்டுவதற்கு முதல் காரணமாக அமைந்தது. ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் போது தன்னுடைய முடியை சீப்பால் சீவிக் கொண்டே இருப்பாராம்.
இரண்டாவதாக அவருக்கு பயன்படுத்தப்பட்ட டை. ரஜினிகாந்த இளமையாக காட்டுவதற்காக அவரது முடிக்கு அடிக்கப்பட்ட டை பின்னாளில் அவருக்கு பெரிய தொந்தரவை ஏற்படுத்தி முடி கொட்டுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதாம்.
மூன்றாவதாக இருந்தது சிகரெட் பழக்கம். அதன் காரணமாகவும் அவருக்கு அளவுக்கு அதிகமாக முடி கொட்டி பின்னாளில் வழுக்கைத் தலையாக மாறிவிட்டதாகவும் ரஜினியின் மேக்கப் மேன் சுந்தர மூர்த்தி என்பவர் சமீபத்தில் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினி ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார் என்பது அனைவருக்குமே தெரியும். அந்த படத்தில் நடித்த போது தான் முதல் முறையாக ரஜினிகாந்துக்கு ஹேர் ஸ்டைல் மாற்றப்பட்டது. அது அவருக்குப் பிடித்துப் போக பின்னாளில் அதையே தொடர்ந்து பயன்படுத்தினாராம்.

ஆனால் ஹாலிவுட் கலைஞர்கள் பயன்படுத்திய ஒருவிதமான மை தான் அவருக்கு சீக்கிரம் முடி கொட்டுவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஆயிரம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்.