சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த 6 மாதங்களுக்கு மெகா ப்ளான் ஒன்றை போட்டுள்ளாராம். இதில்தான் தலைவர் எவ்வளவு உஷார் என்று பாருங்கள் கோலிவுட் வட்டாரமே கிசுகிசுக்கிறது.
2000-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவு படங்களில் நடிக்காமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை அனைத்தும் சரியான பிறகு தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
வருடத்திற்கு 2 படம் எனும் ரேஞ்சுக்கு பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி போன்ற இளம் இயக்குனர்களின் படங்களில் ரஜினி நடிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆறு மாதத்திற்குள் ரஜினிகாந்த் குறைந்தது 2 படமாவது நடித்துவிட வேண்டும் என முடிவு எடுத்துள்ளாராம். இன்னும் வரும் நாட்களில் கொரானோ சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை ரஜினிகாந்த் உடல்நிலை கருதி படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக முடிந்தவரை சீக்கிரம் சில பல படங்களில் நடித்து பல கோடிகளை குவித்து விட வேண்டும் என்ற பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
