விடா முயற்சி படம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே அஜித்தை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் லைக்கா நிறுவனத்திற்கு இப்படத்தின் கதை பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டனர்.
இதனால் அஜித்துக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக மகிழ்த்திருமேனி இப்படத்திற்குள் நுழைய அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டில் வெளியானது. சரி இனி படம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அஜித்தின் அப்பா இறப்புச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இதனால் சில காலம் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் பெரும் சோதனையாக லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் சிக்கிக்கொண்ட லைக்கா இப்போது விடாமுயற்சி படத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. அஜித்தும் தன்னால் முடிந்தவரை லைக்காவுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தை வாங்குவதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது.
ஆனால் அஜித் லைக்காவிடமிருந்து பின்வாங்க மனமில்லாமல் இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போகிறது. இப்படியே போனால் அஜித் வேறு ஒரு தயாரிப்பாளரை தேர்வு செய்வார் என கூறப்படுகிறது. இதே நிலை தான் ரஜினி படத்திற்கும் ஏற்படும் என தெரிகிறது.
அதாவது ரஜினி லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க உள்ளார். இப்போது அஜித் வேறு தயாரிப்பாளரை நாடினால் ரஜினியும் வேறு தயாரிப்பாளரை தான் தேர்ந்தெடுப்பார். ஏனென்றால் ஜூலை மாதத்தில் இந்த படம் தொடங்க வேண்டும் என்ற முடிவில் ரஜினி இருக்கிறாராம்.