எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு கிடைத்த பேரும் புகழையும் பார்த்த பின்பு தான் மற்ற நடிகர்களும் அவரைப் போலவே அரசியலில் கொடி கட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த ஆசையில் தான் கடந்த 10 வருடங்களாக தலைவர் அரசியலுக்கு வருவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு ஆசை காட்டி கடைசியில் ஏமாற்றி விட்டார்.
ஆனால் இப்போது விஜய்யின் அரசியல் பயணம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் விஜய் வரிசையாக பல ஏற்பாடுகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி செய்து கொண்டிருக்கும்போது ரஜினிக்கு 10 வருடத்திற்கு முன்பு என்ன நடந்ததோ அதே தான் தளபதிக்கும் நடந்திருக்கிறது.
விஜய் பனையூரில் உள்ள ஆபீஸில் கட்சி நிர்வாகிகளுடன் ஒரு பிரம்மாண்ட மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார். வெகு சிறப்பாக நடந்த இந்த மீட்டிங்கில் அரசியல் பிரவேசத்திற்காக பல விஷயங்களை மேற்கொண்டுள்ளார். விஜய் அந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி நான்கு கார் பின்னாடி நான்கு கார் என அணிவகுத்து முதல்வர் போலவே சென்றார்.
ஆனால் அந்தக் கார்கள் எல்லாம் போக்குவரத்து சிக்னலை கொஞ்சம் கூட மதிக்காமல் ஜெட் வேகத்தில் பறந்தது. சிக்னலை மதிக்காமல் கார் சென்றதற்காக இந்த கார்களுக்கு தலா 500 ரூபாய் கப்பமும் விஜய் கட்டினார். இதே போல் 10 வருடங்களுக்கு முன்பு ரஜினியும் அரசியல் பிரவேசம் எடுக்கும் போது முன்னாடி நான்கு கார் பின்னாடி நான்கு கார் என சென்றார்.
இப்பொழுது விஜய்க்கும் அதே சென்டிமென்ட் நடந்துள்ளது. எதற்கு இந்த வெட்டி பந்தா! அரசியலுக்கு செல்ல போகிறோம் என விஜய் ஓவர் அலப்பறை செய்கிறாரா என தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த விஷயத்தை வைத்து பங்கம் செய்கின்றனர்.
மேலும் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் லியோ படத்தை விட அவருடைய அரசியல் நகர்வை பற்றிய விஷயத்தை தான் தளபதி ரசிகர்கள் உன்னிப்பாக அறிந்து கொள்கின்றனர். அதில் ஒரு விஷயமாய் அவருடைய கார் சிக்னலில் நிற்காமல் சென்றதற்கு அபராதம் செலுத்தியது இப்போது வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.