பெரிதாய் விருப்பம் இல்லாமல் கழட்டிவிட்ட ரஜினி.. 3 இயக்குனர்களுக்கு சூப்பர் ஸ்டார் போட்ட கொக்கி 

கூலி படம் சூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். அதை முடித்த பிறகு ரஜினி நெல்சன் இயக்கும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளார். இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்த படம் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

70 வயதிலும் 30 வயது இளைஞனை போல் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் துள்ளி குதித்து வருவது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. ஒரு பக்கம் விஜய், அஜித்  இருவருக்கும் சினிமாவில்  நாட்டம் கம்மியானதால் ரஜினி கமல் இருவரும் தான் அடுத்தடுத்து நிறைய படங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.

விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகனை இயக்கிக் கொண்டிருக்கும் ஹச் வினோத், ரஜினியிடமும் ஒரு கதை சொல்லி இருக்கிறார். ஒன்லைன் ஸ்டோரி பிடித்ததால் ரஜினி அதை டெவலப் பண்ணவும் சொல்லி அனுப்பியுள்ளார்.  இதனால்  ஹச் வினோத் அடிக்கடி ரஜினியை சந்தித்து வருகிறார் .

இதற்கிடையில்  தெலுங்கில் நானி  நடித்து  சக்கை போடு போட்ட படம் “சரிபோதா சாணிவரம்” இந்தப் படம் அங்கே நல்ல வசூலை பெற்று கொடுத்தது. இந்தப் படத்தை இயக்கியது விவேக் ஆதிரேயா, இவரை அழைத்து பாராட்டிய  ரஜினி இவரிடமும் ஒரு கதை கேட்டுள்ளாராம். இப்படி ரஜினியின் லிஸ்டு நீண்டு கொண்டே போகிறது.

 இது ஒரு புறம் இருக்க கலைப்புலி  எஸ் தானு மாரி செல்வராஜை ரஜினியிடம் கூட்டி சென்றுள்ளார். அங்கே  மாரி செல்வராஜ் இடமும்  ரஜினி ஒரு கதை கேட்டுள்ளார். ஆனால் அந்த கதையில் பெரிதாய் விருப்பம் இல்லாத ரஜினி அதை நிராகரித்து விட்டார். மற்றொரு ட்ராக்கில் அடிக்கடி வெற்றிமாறன் ரஜினியை சந்தித்து வருகிறார்.