ரஜினியால் இனி எந்த பிரயோஜனமும் இல்லை.. அரசியல், சினிமா எல்லாமே வேஸ்ட் என சொன்ன நெருங்கிய உறவு

தற்போது ரஜினியின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் எப்படியாவது சினிமாவை விட்டு போவதற்கு முன் வருகிற தலைமுறைக்கும் இவர் நடிக்கப் போகும் படம் நிலைத்து நிற்க வேண்டும். அதற்காக ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஏக்கமாக ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இது சம்பந்தமாக ரஜினியின் அண்ணனை பத்திரிகையாளர்கள் கோவிலில் சந்தித்த பொழுது ரஜினியை பற்றி கேட்டிருக்கிறார்கள். அப்பொழுது அவருடைய நடிப்பையும், அரசியல் பற்றியும் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். அதற்கு அவர் கூறிய பதிலைக் கேட்டு பத்திரிகைக்காரர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதாவது அவர் கூறியது ரஜினிக்கு வயது ஆகிவிட்டது அவரால் முன்னாடி மாதிரி எந்த விஷயத்திலும் முழு முயற்சியுடன் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது அவரால் இயல்பாகவும் இருக்க முடியவில்லை. அதனால் அவர் சினிமாவை விட்டு போவதற்கு முன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்கு தான் தற்போது போராடி வருகிறார்.

அவர் நினைத்தபடி அதுவும் கூடிய விரைவில் நடந்து விடும் என்று கூறியிருக்கிறார். அடுத்தபடியாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்ட கேள்வி அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி. அதற்கு அவர் அண்ணன் கூறியது ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தாலும் வேஸ்ட் தான்.

அப்படியே வந்தாலும் அது யாருக்கும் பிரயோஜனம் இருக்காது. மேலும் அவருடைய உடல்நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால் அவரிடம் வேற எதையும் எதிர்பார்க்க வேண்டாம். அடுத்தபடியாக அரசியலிலும் சிக்கிக் கொண்டால் அவரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சமாளிக்க முடியாது. தற்போது அவருடைய நிலைமை இந்த அளவுக்கு தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் ரஜினியை இப்படியே விட்டு விடுங்கள். அவர் நினைத்தபடி சினிமாவில் இப்படியே இருந்து விட்டு இவருக்கு தேடி வரும் வாய்ப்புகளில் நடித்துவிட்டு ஓய்வு பெற்று விடுவார். அவர் இந்த அளவுக்கு சினிமாவில் தாக்குபிடித்து நடிப்பது மிகப்பெரிய விஷயம் தான். இதற்கு அடுத்து இன்னும் அதிகமாக அவரிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று இவர் அண்ணன் கூறியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.