ஒரு காலகட்டத்தில் ரஜினி, பிரபு காம்போவில் வெளியான படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் கிட்ட தான். ரசிகர்களுக்கு இவர்களது கூட்டணியில் வெளியான படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அவ்வாறு தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் என பல படங்களில் இவர்கள் நடித்துள்ளார்கள்.
சினிமாவில் பல நடிகர்கள் இதுபோன்று சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரஜினி, பிரபு இருவருக்கும் தனி மவுசு தான். இவர்களைப் போல் மற்றொரு கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த சினிமா சகோதரர்களும் எண்ணற்ற வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளனர்.
மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவருடன் பல படங்களில் சகோதரராக நடித்தவர் ஸ்ரீகாந்த். மேலும் சிரஞ்சீவி விழா மேடைகளில் தன்னுடைய சகோதரர் பவன் கல்யாண் போல தான் ஸ்ரீகாந்தும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சிரஞ்சீவியை முன்னோடியாக வைத்து தான் ஸ்ரீகாந்த் சினிமாவில் நுழைந்தார்.
தமிழ் மொழியில் எப்படி ரஜினி, பிரபு கூட்டணி வெற்றி பெறுகிறதோ அதே போல் தான் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் தற்போது வரை இவர்கள் இருவரும் தங்களது நட்பை தொடர்ந்து வருகிறார்கள்.
ஸ்ரீகாந்த் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தில் தளபதியின் மூத்த சகோதரராக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருவதால் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஆகையால் ரஜினி, பிரபு ஆகியோருக்கு இணையாக தமிழ் சினிமாவில் மற்றொரு கூட்டணி எப்படி வரவில்லையோ அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்தை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு யாரும் வரவில்லை.