Rajini: ரஜினி படம் நல்லா இருக்கோ இல்லையோ அவருடைய நடிப்பையும் ஸ்டைலையும் பார்க்க வேண்டும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு போய் பார்த்து ரசித்து வருகிறார்கள். அதனாலையே என்னமோ ரஜினியின் படங்களுக்கு ஒவ்வொரு முறையும் மவுசு கூடிக் கொண்டே இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே தயாரிப்பாளர்களும் ரஜினியின் கால் சீட்டுக்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி, மொகைதீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குக்கு வர இருக்கிறது. இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
பொதுவா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படத்திற்கு இந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஒரு ஹைப்பை ஏற்படுத்திருக்க வாய்ப்பே இல்லை. அதற்காகத்தான் ரஜினியை பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களிடம் பிரமோஷன் செய்தார். அதற்கு ஏற்ற மாதிரி லால் சலாம் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ரஜினி நடித்ததால் மட்டுமே சாத்தியமாகும்.
அவருக்காக தான் படத்தின் வியாபாரமும் கல்லாகட்ட ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து படம் ரிலீஸ் ஆனாலும் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு வசூல் கிடைத்துவிடும். இதையெல்லாம் மனதில் வைத்து தான் ரஜினியும் என்ன வச்சு தான் முழுக்க முழுக்க இப்படத்திற்கு பிஸ்னஸ் நடந்திருக்கிறது. அதனால் எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை சரியாக கொடுத்து விட வேண்டும் என்று மகளிடமே காரராக பேசியிருக்கிறார்.
என்னதான் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும் சொந்த மகள் இயக்கிய படம் தானே என்று கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் ஆகாமல் சம்பளத்தை பற்றி மகளிடம் பேரம் பேசி இவருக்கு தேவையான 40 கோடி சம்பளத்தை பெற்று விட்டார். எது நடந்தாலும் காரியத்துல கண்ணாகதான் இருக்கணும் என்று சொல்வார்கள், அதுபோல ரஜினியும் இப்படத்தில் அவருக்கு தேவையான சம்பளத்தை பேசி வாங்கிக் கொண்டார்.