ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

Rajini-Arjun: சூப்பர் ஸ்டார் சில விஷயங்களில் இறங்கும் போது எல்லா கோணத்திலும் யோசித்து தான் செயல்படுவார். அப்படி அவர் யோசித்து வேண்டாம் என்று ஒதுங்கிய ஒரு விஷயத்திற்காக ஆக்ஷன் கிங் தைரியத்தோடு இறங்கிய சம்பவமும் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது.

அதாவது 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் முதல்வன். அர்ஜுன், மனுஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைகளாக அமைக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாகவே இப்படம் வெளியான சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் மதுரையில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளி படத்தை வெளிவர விடாமல் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார். இப்படி பயங்கர எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதல்வன் படம் வெளியானது. ஆனால் அப்போதும் கூட படம் ஓடக்கூடாது நஷ்டம் அடைய வேண்டும் என சில விஷயங்களும் நடந்தது.

அதாவது முதல்வன் பட சிடியை தயாரித்து மதுரை முழுக்க அதை விநியோகம் செய்து படத்தின் லாபத்தை குறைக்க பார்த்தனர். ஆனால் இது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. முதல்வன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் ஒரு நாள் முதல்வர் என்ற விஷயமும் பிரபலமானது.

மேலும் அப்படம் இன்று வரை அர்ஜுனுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் இக்கதையை தயார் செய்தபோது ஷங்கர் முதலில் நடிக்க கேட்டது ரஜினியை தான். ஆனால் இந்த கதையில் நடிப்பது சரியாக வருமா என்று யோசித்த சூப்பர் ஸ்டார் நமக்கு எதுக்கு வம்பு என்று நடிக்க மறுத்திருக்கிறார்.

இப்படி பல இடையூறுகளுக்கு இடையில் வெளிவந்த இப்படம் தற்போது இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது. இந்தியன் 2 பட வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர் அதை முடித்துவிட்டு இதற்கான கதையை தயார் செய்யும் முடிவில் இருக்கிறாராம். அந்த வகையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக போகும் இப்படத்தை பிரமாண்டமாக எடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.