சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தன்னுடைய சிகிச்சைகளை முடித்து விட்டு சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து தற்போது அண்ணாத்த படத்தின் ஒரு வார படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.
சில காட்சிகள் நினைத்தபடி வராததால் ரஜினிகாந்திடம் ஸ்பெஷல் பெர்மிஷன் கேட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஏற்பாடுகளை செய்து படக்குழுவினரை மேற்கு வங்காளத்திற்கு அனுப்பியுள்ளதாம்.
இந்நிலையில் ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்த உடனே அவரது இளைய மகள் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாராம். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறுகின்றனர்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவருடன் இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சௌந்தர்யா விசாகன் என்பவரை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதியினருக்கு ஒரு புதிய குழந்தை வர உள்ளதாம்.
இதைக் கேட்டதும் ரஜினிகாந்த் செம சந்தோஷம் ஆகிவிட்டாராம். ஏற்கனவே மூன்று பேரன்கள் இருப்பதால் இந்த முறை பேத்தி வந்தால் நன்றாக இருக்கும் எனவும் மகள்களுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்து வருகிறாராம் ரஜினிகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
