11 வருடம் கழித்து ரிஸ்க் எடுக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி

தீபாவளியன்று சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு என பல பிரபலங்கள் நடித்த அண்ணாத்த படம் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நேர் மற்றும் எதிர் என கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டரில் முதல் இடத்தை பிடித்தது. அண்ணாத்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

ஆனால் சூர்யா, கார்த்திக்கு சிறுத்தை பட வாய்ப்பை தந்திருந்தார். தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் கூட்டணி போடுகிறார் இயக்குனர் சிவா. இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்க உள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010ல் கோவா திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து ரஜினி படத்தை தயாரிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். சௌந்தர்யா ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு மீண்டும் அப்பாவுடன் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குனர் சிவாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதற்கேற்றார்போல் சௌந்தர்யா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ளார். அண்ணாத்த படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார், சிவா கூட்டணியில் வரப்போகும் படம் என்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.