ரஜினியின் கடைசி படம் லோகேஷ் இல்ல.. வேறு இயக்குனரை லாக் செய்த சூப்பர் ஸ்டாரின் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி தாமாகவே முன்வந்து இயக்குனர் லோகேஷிடம் தனது கடைசி படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் லோகேஷ் லியோ படத்தை முடித்த கையுடன் ரஜினி படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு இயக்குனரை லாக் செய்து உள்ளார்.

அதாவது ரஜினி ஒருவேளை லோகேஷ் படம் காலை வாரிவிட்டால் அசிங்கமாக போய்விடும் என்று வேறு முடிவு செய்து உள்ளார். நிறைய டைரக்டர்கள் வந்தாலும் ஷங்கர் படம் தான் ரஜினிக்கு மனம் நிறைவு கொடுக்கும். அதுமட்டும்இன்றி ஏற்கனவே இவர்களது காம்போவில் வெளியான எந்திரன், 2.o படங்கள் வசூல் சாதனை படைத்தது.

ஆகையால் இப்போது ஷங்கரை வைத்து 3.0 படத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு ரஜினி வந்துள்ளாராம். மேலும் இதுவரை இல்லாது வேறு கோணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கும் திட்டத்தில் உள்ளனராம். இப்போது ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார்.

மேலும் வேள்பாரி படத்தை எடுக்கும் திட்டத்திலும் உள்ளார். இந்த படத்தை எடுத்தால் குறைந்தபட்சம் நான்கு, ஐந்து வருடங்கள் ஆகிவிடும். எனவே ரஜினியின் 3.0 படத்தை எடுத்து முடித்துவிட்டு வேள்பாரி படத்தை எடுக்க உள்ளார். மேலும் 3.0 படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுதான் ரஜினியின் கடைசி படம் என்று கூறப்படுகிறது.

rajini-3.o
rajini-3.o