தலைவரை சுத்தலில் விடும் லோகேஷ்.. பாகுபலி ரேஞ்சுக்கு கொடுக்கும் பில்டப்

Rajini, Lokesh: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பிறகு லோகேஷ் படத்தில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்க போட்டு விடலாம் என்று எண்ணத்தில் தலைவர் இருந்தார். ஆனால் இப்போது லோகேஷ் ரஜினிக்கு தனிக்காட்டி வருகிறார். அதாவது விஜய்யின் லியோ படத்தை தற்போது லோகேஷ் எடுத்து வருகிறார். அடுத்ததாக ரஜினியின் படத்தை தான் லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது பான் இந்தியா ஸ்டாரான பாகுபலி பிரபாஸின் படத்தை இயக்க இருக்கிறாராம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு அடுத்தபடியாக சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்துள்ளது.

இப்படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக எடுக்கப்பட இருக்கிறது. ஆகையால் எப்படியும் இந்த படம் எடுக்கவே பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் பிரபாஸ் படத்தை இயக்க உள்ளதால் ரஜினி சொன்ன நேரத்திற்கு அவரால் வர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இதனால் தலைவர் செம அப்சட்டில் இருக்கிறாராம். அதுமட்டுமின்றி லோகேஷ் கமலை வைத்து மற்றொரு படம் இயக்கப் போகிறார். அதன்பின் கைதி 2 என லோகேஷின் லைன் அப்பில் எக்கச்சக்க படங்கள் இருந்து வருகிறது. இதனால் ரஜினியின் படம் தள்ளி போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த வருடமே சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்த தலைவரின் தலையில் இடியை இறக்கியுள்ளார் லோகேஷ். ஆனால் கண்டிப்பாக இவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாவது உறுதியான விஷயம்தான். ஆனால் கால தாமதமும் ஒரு வகையில் நல்லது தான் என்பது போல ரஜினி இன்னும் சில ஆண்டுகள் சினிமாவில் இருப்பார் என்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.