ஜெய்யை தூக்கிவிட உதவும் ஜெயிலர்..

ஜெய் 2002இல் விஜய் நடித்த பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். தற்செயலாக நண்பர்கள் மூலம் நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவில் முக்கியமானவராக திகழ்ந்தார். சினிமாவில் இவரது தொடக்கம் நல்ல விதமாக அமைந்தது. சென்னை 28 இல் அறிமுகமாகி அனைத்து இளைஞர் மனதிலும் இடம்பிடித்தார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக மாறினார். நல்ல படங்கள் கொடுத்து வந்த நேரத்தில் இவரது தவறான சில பழக்க வழக்கங்களால் முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதற்கு காரணம் இவர் நிறைய பார்டிஸ் அண்ட் பிரண்ட்ஸ் என்று ஜாலியாக சுற்றுபவர். இவருக்கு நிறைய காதல் கதைகள் இருந்தாலும் முக்கியமானது அஞ்சலியுடன் இவர் சேர்ந்து சுற்றியது மட்டுமே அனைவருக்கும் தெரியும்.

அஞ்சலி இவரும் திருமணம் செய்வதாக இருந்தது ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடைபெறாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை.மேற்கொண்டு சில படங்கள் நடித்தும் அந்த படங்கள் வெற்றி அடையவில்லை. இனிமேல் இவர் சினிமாவில் முன்னேறுவது கடினம் என்று பேச்சுகள் வந்தன.

ஆனால் தற்போது இவருக்கு நயன்தாரா நடிக்கும் 75வது படத்தில் இவர் வேண்டும் என்று நயன்தாரா இவரை சிபாரிசு செய்தார். அடுத்ததாக இவரின் முக்கிய வாய்ப்பாக ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதனை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை.

இப்போது அறம் பட இயக்குனர் ஜெய்யை வைத்து ஒரு மணி நேரம் டெஸ்ட் ஷூட் எடுத்தார். இயக்குனருக்கு மகிழ்ச்சி அதனால் ஜெய் கதாநாயகனாக கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை தொடங்க போகிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது வாணி போஜன் அவர்களுடன் சுற்றுவதாக பேச்சு அடிபடுகிறது இதை இவர் நிறுத்திக்கொண்டு இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மறுபடியும் ஜெய்க்கு முக்கியமாக இந்த மூன்று படங்களும் அமைந்துள்ளது. இந்த படங்களை வைத்து இவர் மேன்மேலும் வளர வேண்டும். ஆனால் இவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.இல்லை என்றால் மறுபடியும் இந்த வாய்ப்புகள் வருவது கடினம்.ஜெய் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம், ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்.