ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் போன்றவற்றை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
தர்பார் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அரசியலில் வரப்போவதாக தெரிவித்தது ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவர்தான் அடுத்த சிஎம் என்கிற ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டார்.
ஆனால் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில் திடீரென ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. பின்னர் உடல்நிலை சீரான பிறகு அரசியல் பிரவேசம் இல்லை என குறிப்பிட்டிருந்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இந்த முடிவை அரைமனதாக ஏற்றுக் கொண்டனர் அவரது ரசிகர்கள். இவை போல் தான் ரஜினி பல வருடமாக கூறி வருவதாக அவரது ரசிகர்கள் தங்களுடைய ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் அரசியலில் களமிறங்க போவது போன்ற ஒரு செய்தியைச் சொல்லி பரபரப்பாக்கி உள்ளார். மேலும் அது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக மீண்டும் தன் வாயால் கெட்டுள்ளார் ரஜினி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விரைவில் அண்ணாத்த படம் வெளியாக இருப்பதால் அந்தப் படத்தின் வசூலுக்காக மீண்டும் அரசியல் என்ற கதையை கட்டுகிறார் எனக் கிசுகிசுக்கின்றனர்.
