Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல படங்கள் வெளியானாலும் சரி சமூகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் முதலில் தனது கருத்துக்களை தெரிவித்து விடுவார். அதோடு நல்ல படம் வெளியான சமயத்தில் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து சொல்லிவிடுவார்.
இந்த சூழலில் காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியா 9 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிப்பிட்டு சிந்தூர் என்று இந்த ஆப்ரேஷனுக்கு பெயர் வைத்துள்ளனர். ஏனென்றால் பஹல்காம் தாக்குதலில் மனைவி முன்னிலையில் 26 கணவன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
மோடியை பாராட்டிய ரஜினி

அவர்கள் நெற்றியில் குங்குமம் வைக்காத சூழ்நிலையை உருவாக்கியதால் இதற்கு சிந்தூர் என்று பெயரிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த ஆப்ரேஷனுக்கு பல பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் இந்திய ராணுவ படைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதேபோல் ரஜினியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார். அதில் மோடி மற்றும் அமித்ஷா இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதோடு போராளியின் சண்டை தொடங்கிய விட்டது. இலக்கை அடையும்வரை நிறுத்த போவதில்லை, முழு தேசமும் உங்களுடன் நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது. மேலும் இப்போது இதனால் பதற்றமான சூழ்நிலை வருவதால் இந்திய ராணுவ படை எல்லாவற்றிற்கும் தயாராகவும் இருக்கிறது.