கைவிரித்த ஓடிடி நிறுவனம்.. ரஜினி மகள்களுக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனை

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறார். 70 வயதை கடந்தும் ஓய்வெடுக்காமல் கதாநாயகனாக படங்களில் நடித்து சம்பாதித்து வருகிறார். ஆனால் அவரது மகள்கள் தொடர்ந்து சொதப்பி வருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

அதாவது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் லால் சலாம் படம் எடுத்திருந்தார். லைக்கா தயாரித்த இந்த படத்தில் ரஜினியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.

மேலும் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் காற்றோடு போனது.

ரஜினி மகள்களுக்கு அடுத்தடுத்த வரும் பிரச்சனை

இப்போது ரஜினியின் இளையமகள் கோச்சடையான் படத்திற்கு பிறகு குருதிப்புனல் என்ற படத்தை இயக்கி வருகிறார். கமல் பட டைட்டிலை கொண்டு இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்து வருகிறார்.

குருதிப்புனல் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது நிதி பற்றாக்குறையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சௌந்தர்யா சொன்ன பட்ஜெட்டை தாண்டி விட்டாராம்.

ஆகையால் இதற்கு மேல் பட்ஜெட் ஒதுக்க முடியாது என்று அமேசான் நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு ரஜினி மகள்களுக்கு ஓடிடியால் அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.